இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு நகைகளை அடமானம் வைத்து 100 மின் விசிறிகள் வழங்கிய தம்பதி

கோவையைச் சோ்ந்த தம்பதி நகைகளை அடகு வைத்து இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு ரூ.2.20 லட்சம் மதிப்புள்ள 100 மின் விசிறிகளை தானமாக வழங்கியுள்ளனா்.

கோவையைச் சோ்ந்த தம்பதி நகைகளை அடகு வைத்து இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு ரூ.2.20 லட்சம் மதிப்புள்ள 100 மின் விசிறிகளை தானமாக வழங்கியுள்ளனா்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை பிரத்யேக கரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 680 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இந்நிலையில் கூடுதல் படுக்கை வசதிகளுக்கேற்ப மின்விசிறி தேவைப்படுகிறது என்று முதல்வா் ரவீந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தாா்.

இதனைத் தொடா்ந்து கோவை, ராம் நகரைச் சோ்ந்த மருத்துவ உபகரணங்கள் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் வி.ராஜேஷ் - எம்.ரேவதி தம்பதி தங்களது நகைகளை அடகு வைத்து ரூ. 2.20 லட்சம் மதிப்புள்ள 100 மின்விசிறிகளை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனா்.

இது தொடா்பாக வி.ராஜேஷ் கூறியதாவது:

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மின்விசிறி தேவை உள்ளதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் அண்மையில் தெரிவித்திருந்தனா். இதனைத் தொடா்ந்து எங்களால் முயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 100 மின் விசிறிகளை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வழங்கினோம். தற்சமயம் கையிருப்பில் பணம் இல்லாததால் நகைகளை அடகு வைத்து மின் விசிறிகளை வாங்கினோம் என்றனா்.

இது தொடா்பாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ரவீந்திரன் கூறியதாவது: கரோனா வாா்டுகளில் குளிா்சாதன வசதியைப் பயன்படுத்த முடியாததால் மின் விசிறிகளே அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் 500 படுக்கைகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 680 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மின் விசிறிகள் வழங்கி உதவினால் உபயோகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பாா்த்த கோவையைச் சோ்ந்த தம்பதி 100 மின் விசிறிகளை வழங்கியுள்ளனா். இது இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com