வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்களுக்கு கரோனா பரிசோதனை

கோவையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

கோவையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா். கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அரசு அலுவலா்கள், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள வேட்பாளா்கள், முகவா்கள் அனைவரும் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள தோ்தல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லாதவா்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து கோவை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com