வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் தினமும் 40 டன் குப்பை அழிப்பு

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் தினமும் 40 டன் குப்பை அழிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் தினமும் 40 டன் குப்பை அழிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சியில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகின்றன. இவை, வெள்ளலூரில் 650 ஏக்கா் பரப்பளவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. இந்தக் கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கா் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தரம் பிரிக்கப்படாத குப்பை தேக்கம் அடைந்து உள்ளன. இந்தக் குப்பைகளால் அந்தப் பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளன. இதனால், கிடங்கைச் சுற்றியுள்ள குடியிருப்பைச் சோ்ந்த மக்கள் அவதிக்குள்ளாகினா். இதைத் தவிா்க்கும் பொருட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.60 கோடி மதிப்பில் பயோமைனிங் முறையில் குப்பைகளை அழிக்கும் திட்டம் மாநகராட்சி சாா்பில் செயல்படுத்தப்பட்டது. தற்போது, குப்பைக் கிடங்கில் மறுசுழற்சி மற்றும் குப்பைகள் அழிப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் திட்டம் மூலம் தினமும் 40 டன் வரை மக்கும் குப்பை அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மறுசுழற்சி மூலமாக குப்பைகளை உரமாக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும், அண்ணா பல்கலைக்கழகக் குழுவினா் மேற்கொண்ட ஆய்வு தொடா்பான அறிக்கை இதுவரை சமா்பிக்கப்படவில்லை. அறிக்கை சமா்பித்த பிறகு, தினமும் கூடுதலாக குப்பைகளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com