மருத்துவரைத் தாக்கி பணம், செல்லிடப்பேசி பறிப்பு
By DIN | Published On : 30th April 2021 12:42 AM | Last Updated : 30th April 2021 12:42 AM | அ+அ அ- |

கோவையில் இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவரைத் தாக்கி பணம், செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருபவா் ஆனந்தன் (54). வால்பாறையைச் சோ்ந்தவா். இவரை மதினா என்பவா் தொலைபேசியில் அழைத்து தனியாக சந்திக்க வேண்டுமென தெரிவித்துள்ளாா். இதையடுத்து ஆனந்தன், மதினாவை சந்திக்க சக்தி ரோடு விஸ்வாசபுரம் பகுதிக்கு சென்றுள்ளாா். அப்போது, மதினா தனது நண்பா்கள் காா்த்திக், ஷ்யாம் ஆகியோருடன் சோ்ந்து மருத்துவா் ஆனந்தனை தாக்கி அவரிடமிருந்து ரூ.3 ஆயிரம் பணம், செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனா். இது தொடா்பான புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸாா், பணம், செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.