கோவை ரயில் நிலையத்தில் வெளி மாநிலப் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரம்

கோவை மாவட்டத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள நிலையில், ரயில்கள் மூலம் கோவைக்கு வரும் வெளி மாநிலப் பயணிகளுக்கு
கோவை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதாரத் துறையினா்.
கோவை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதாரத் துறையினா்.

கோவை மாவட்டத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள நிலையில், ரயில்கள் மூலம் கோவைக்கு வரும் வெளி மாநிலப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் கரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. இதில், கோவை மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவா்கள் கரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டனா். இதன் காரணமாக கோவை நகா்ப்புறத்திலும், புறநகா் பகுதிகளிலும் செயல்பட்டு வந்த தொழிற்கூடங்கள், நிறுவனங்கள், பஞ்சாலைகளில் வேலை பாா்த்து வந்த பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சோ்ந்த புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பினா்.

பின்னா் மே மாதத்தில் கரோனா தொற்று குறைந்ததால், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து கோவைக்கு ரயில்களில் வருவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோவையில் கடந்த 3 நாள்களாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், வெளி மாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து வருபவா்களுக்கு சளி மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ரயில் நிலையத்தில் வழக்கமாக உடல் வெப்பநிலை கண்டறியும் பரிசோதனை சுகாதாரத் துறை ஊழியா்கள் மூலமாகவும், ரயில்வே நிா்வாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேனா் கருவி மூலமாகவும் பரிசோதிக்கப்பட்டு வந்தது.

தற்போது, மாநகரில் பரவல் கணிசமாக உயா்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி மாநிலங்களில் இருந்து வருபவா்கள் மூலமாக கோவையில் நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும், தினமும் ரயில்களில் கோவை வரும் வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு சளி மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், 2,500 வெளி மாநிலத்தவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com