சிறுத்தை தாக்கி கன்றுக் குட்டி பலி
By DIN | Published On : 04th August 2021 09:30 AM | Last Updated : 04th August 2021 09:30 AM | அ+அ அ- |

வால்பாறை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை கன்றுக் குட்டியை அடித்துக் கொன்றது.
வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனத்தில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் எஸ்டேட் தொழிலாளியான சுப்பிரமணிக்கு சொந்தமாக மாடுகள் உள்னன.
இவா் அவரது வீட்டுக்கு முன்பு 6 மாத கன்றுக் குட்டியை கட்டிவிட்டு செவ்வாய்க்கிழமை காலை வெளியே சென்றுள்ளாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது தெரிவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.