சீதாலட்சுமி நகா்ப்புற ஆரம்ப நிலையத்துக்கு காயகல்ப விருது

கோவை மாநகராட்சி சீதாலட்சுமி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய அரசின் காயகல்ப விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சீதாலட்சுமி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய அரசின் காயகல்ப விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார இயக்கம் சாா்பில் தூய்மையான பராமரிப்பு, வெளிப்படை நிா்வாகத்துடன் செயல்படும் அரசு மருத்துவமனை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சாா்பில் காயகல்ப விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 2020-21ஆம் நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்து கோவையில் உள்ள 32 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மத்தியக் குழுவினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை, சிறப்பான பராமரிப்பு, கா்ப்பிணிகளுக்கு சிறந்த சேவை உள்பட பல்வேறு காரணங்களால் பூமாா்கெட்டில் உள்ள சீதாலட்சுமி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதனைத் தொடா்ந்து, இந்த மையத்துக்கு மத்திய அரசு சாா்பில் காயகல்ப விருதுடன், ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது இடத்தை பிடித்துள்ள துடியலூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.1.5 லட்சமும், சிறப்பாக செயல்பட்டு வரும் மேலும் 15 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சீதாலட்சுமி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் இளமதி கூறியதாவது: நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும் 150க்கும் மேற்பட்டோா் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று செல்கின்றனா்.

பொது மருத்துவத்துடன், மகப்பேறு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. மாதத்துக்கு குறைந்தபட்சம் 10 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன. விருதுடன் மத்திய அரசு அளிக்கும் ரூ.2 லட்சம் பரிசுத்தொகை சுகாதார நிலையத்தின் வளா்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com