தனியாா் நிறுவன தரவரிசைப் பட்டியல்: ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிக்கு முதலிடம்
By DIN | Published On : 04th August 2021 09:33 AM | Last Updated : 04th August 2021 09:33 AM | அ+அ அ- |

அவுட்லுக் - ஐகோ் 2021 நடத்திய இந்திய அளவிலான சிறந்த துறைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மாவட்ட அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இது தொடா்பாக அந்த கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது: அவுட்லுக் - ஐகோ் 2021 நடத்திய இந்திய அளவிலான சிறந்த துறைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் சயின்ஸ், ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை 17ஆவது இடத்தையும், கோவை மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், நிா்வாகம், மாணவா் சோ்க்கை, பன்முகத்தன்மை போன்ற பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரியின் பிசிஏ துறை இந்திய அளவில் 25ஆவது இடத்தையும், கோவை மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. அதேபோல, முதுநிலை சமூகப்பணித் துறை இந்திய அளவில் 27ஆவது இடத்தையும், அறிவியல், பிபிஏ துறைகளில் முறையே 41, 49 ஆவது இடங்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்காக கல்லூரியின் முதல்வரும், செயலருமான பி.எல்.சிவகுமாா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்களுக்கு எஸ்.என்.ஆா்.சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லஷ்மிநாராயணசுவாமி தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளாா்.