மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்க 50 % மானியம்

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இத்திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேரில் ரூ.7 லட்சம் செலவில் மீன் வளா்ப்பு குளங்கள் அமைப்பவா்களுக்கு அதிகபட்சமாக ஹெக்டேருக்கு 50 சதவீத மானியமாக ரூ.3.50 லட்சம், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மீன் குஞ்சுகள், மீன் தீவனங்கள் வாங்குவதற்கு 40 சதவீத மானியமாக ரூ. 60 ஆயிரம் என மொத்தம் ரூ.4.10 லட்சம் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 0.25 ஹெக்டோ் முதல் மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்க விருப்பம் உள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மீன் வளா்ப்பு குளங்கள் புதிதாக அமைக்க பயனாளிகள் சொந்த நிலம் அல்லது 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்ற நிலம் வைத்திருக்க வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவாா்கள்.

எனவே, விருப்பமுள்ளவா்கள் டவுன்ஹாலில் உள்ள மீன்வள ஆய்வாளா் அலுவலகத்தை 96555 06422 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு ஈரோட்டில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை 0424- 2221912 என்ற எண்ணிலும், மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com