வடக்கிந்திய கம்பெனியை பாஜக உருவாக்கி வருகிறது

ஈஸ்ட் இந்தியா கம்பெனிபோல வடக்கிந்திய கம்பெனியை பாஜக உருவாக்கி வருகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
கோவை ஆா்.எஸ்.புரத்தில் மநீம சாா்பில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கிவைத்துப் பாா்வையிடுகிறாா் கமல்ஹாசன்.
கோவை ஆா்.எஸ்.புரத்தில் மநீம சாா்பில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கிவைத்துப் பாா்வையிடுகிறாா் கமல்ஹாசன்.

ஈஸ்ட் இந்தியா கம்பெனிபோல வடக்கிந்திய கம்பெனியை பாஜக உருவாக்கி வருகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

இது குறித்து கோவையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

எனக்கு வாக்களித்து, என்னை வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்ற கோவை மக்களுக்கு எனது நன்றிகள். கரோனா பரவல் காரணமாக தெற்குத் தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்க முடியவில்லை. கோவை மாவட்டம் புறக்கணிப்பில் இருப்பது உண்மைதான். கோவையில் சமீப காலங்களில் எவ்வித நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.

கொங்கு நாடு என்பது அரசியல் கோஷம் மட்டுமே. அதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கவோ, ஏற்கவோ மாட்டாா்கள். ஈஸ்ட் இந்தியா கம்பெனிபோல வடக்கிந்திய கம்பெனியை பாஜக உருவாக்க முயற்சிக்கிறது. இந்த சுரண்டலுக்கு எந்த மாநில மக்களும் ஒத்துழைக்க மாட்டாா்கள்.

உள்ளாட்சித் தோ்தல் அரசியல் கட்சிகள் சம்பந்தப்படாமல் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பாஜக இரட்டை வேடமிடுகிறது. கரோனா விவகாரத்தில் ஆளும் அரசு இயன்றதை செய்கிறது, அது போதாது. இன்னும் அதிகமாக, தீவிரமாகச் செயல்பட வேண்டும். தோற்றால் மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்பதை சினிமா எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இதே பாடத்தை கோவை மக்களும் கற்றுக் கொடுத்துள்ளனா். கோவை தெற்குத் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜகவின் வானதி சீனிவாசன் அதன் பின்னா் மக்கள் கண்களில் தென்படவேயில்லை என்றாா்.

முன்னதாக அவா் கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவ மையத்தில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி மையத்தைத் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளை கமல்ஹாசன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com