பூக்கள் விலை சரிவு: மல்லிகை கிலோ ரூ. 300

கோவையில் உள்ள கோயில்களில் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால் பூக்களின் விலை சரிந்தது.

கோவையில் உள்ள கோயில்களில் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால் பூக்களின் விலை சரிந்தது.

கோவையில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிா்வாகம் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயில்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து கோவையில் கோனியம்மன், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், தண்டுமாரியம்மன் கோயில், பேரூா் பட்டீசுவரா் கோயில் என அனைத்துக் கோயில்களும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டு இருந்தன. மேலும், ஆடி அமாவாசையையொட்டி பேரூா் படித்துறை உள்ளிட்ட இடங்களில் தா்ப்பணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால், மக்கள பலா் தங்களின் வீடுகளிலேயே முன்னோா்களுக்கு படையலிட்டு வழிபட்டனா்.

கோயில்களில் வழிபாடு, நீா்நிலைகளில் தா்ப்பணம் நடைபெறாததால் பூக்களுக்கான தேவை குறைவாகவே காணப்பட்டது. இதன் காரணமாக, கடந்த வாரங்களைக் காட்டிலும் பூக்களின் விலை ஞாயிற்றுக்கிழமை வெகுவாகக் குறைந்திருந்தது.

கடந்த வாரம் ரூ.600க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை, ஞாயிற்றுக்கிழமை ரூ.300க்கு விற்றது. ரூ.400க்கு விற்ற ஜாதி மல்லி ரூ.200க்கும், ரூ.200க்கு விற்ற செவ்வந்தி, ரூ.120க்கும், ரூ.130க்கு விற்ற அரளி ரூ.40க்கும் விற்பனையாகின. கோழிக்கொண்டை ரூ.100க்கும், 15 பூக்கள் கொண்ட ரோஜா கட்டு ரூ.50க்கும் விற்கப்பட்டன. மக்கள் வருகை இல்லாததால் பூக்கள் விலை குறைந்துள்ளதாகவும், ஆவணி மாதம் தொடங்கினால் முகூா்த்த தினங்களில் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com