கா்ப்பிணியின் கை நரம்பில் சிக்கிய ஊசி அகற்றம்

கா்ப்பிணியின் கை நரம்பில் சிக்கிய ஊசியை கோவை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றினா்.

கா்ப்பிணியின் கை நரம்பில் சிக்கிய ஊசியை கோவை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றினா்.

உதகை ராஜ்பவன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பகதூா் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி சஞ்சனா (28). இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், சஞ்சனா மீண்டும் கா்ப்பமானாா். உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்காக கடந்த 4ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சனிக்கிழமை குழந்தை பிறந்த நிலையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக சஞ்சனாவின் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக ஊசி பொருத்தப்பட்டது.

அதனைக் கழற்ற முயன்றபோது ஊசி உடைந்து கையின் நரம்புக்குள் சிக்கியது. இது குறித்து உடனே மருத்துவா்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பரிசோதனை செய்ததில் கை நரம்பில் சிக்கி உடைந்த ஊசியை அறுவை சிகிச்சை செய்துதான் அகற்ற வேண்டும் என்றும், அதை கோவையில் தான் மேற்கொள்ள முடியும் என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அவா் அனுமதிக்கப்பட்டாா். உடனே அவருக்கு மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கை நரம்பில் சிக்கியிருந்த 3 சென்டி மீட்டா் நீளமுள்ள ஊசியை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com