வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு தடை ஆட்சியா்

கோவையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

கோவையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் கோவையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டு தலங்களில் பொது மக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5, 6, 7 ஆவது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூா்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகா் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூா் சந்திப்பு ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறிக் கடைகள் தவிா்த்து மற்ற கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com