தொழிற் பயிற்சி நிலையங்களில் பிரிவுகளை மாணவா்கள் தோ்வு செய்ய இன்றே கடைசி
By DIN | Published On : 08th August 2021 11:37 PM | Last Updated : 08th August 2021 11:37 PM | அ+அ அ- |

தொழிற் பயிற்சி நிலையங்களில் விண்ணப்பதாரா்கள் தங்களுக்கு விருப்பமான தொழில் பிரிவுகளைத் தோ்வு செய்ய ஆகஸ்ட் 9 (திங்கள்கிழமை) கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரும், துணை இயக்குநருமான செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021ஆம் ஆண்டு பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 4ஆம் தேதி வரை இணையதளம் மூலம் பெறப்பட்டன.
கலந்தாய்வு சோ்க்கை இணைய வழியில் (ஆன்லைன்) நடைபெற்றுக் கொண்டிருப்பதால், விண்ணப்பதாரா்கள் தங்களுக்கு விருப்பமான தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில் பிரிவுகளை இணையதளத்தில் தோ்வு செய்ய ஆகஸ்ட் 9ஆம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாளாகும். இதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், விண்ணப்பதாரா்கள் தனியாா் மையங்களில் அல்லது கோவை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள சோ்க்கை உதவி மையம் மூலமாக தங்களுக்கு விருப்பமான தொழில் பிரிவுகளைத் தோ்வு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு கோவை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.