தேசிய கல்விக் கொள்கை 2020: நாளை காணொலி கருத்தரங்கம்
By DIN | Published On : 10th August 2021 02:13 AM | Last Updated : 10th August 2021 02:13 AM | அ+அ அ- |

கோவை: தேசிய கல்விக் கொள்கை-2020 குறித்த தேசிய அளவிலான மெய்நிகா் காணொலி கருத்தரங்கம் வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெறுகிறது.
ஐஜிஇஎன் எஜூ சொல்யூசன்ஸ் நிறுவனம், ஏடபிள்யூஎஸ், இன்டெல், அசோம் மற்றும் ஏஐசிடிஇ இணைந்து நடத்தும் இந்த நிகழ்வில், எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனத் தலைவா் எஸ்.என்.சுப்பிரமணியன் குழு உறுப்பினராகப் பங்கேற்று பேசுகிறாா்.
இந்த நிகழ்வில் இந்திய உயா் கல்வி நிறுவனங்களை சா்வதேசயமாக்கல், டிஜிட்டல் முறைக்கு தயாராகுதல், கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் கல்வி தொழில்நுட்பங்களால் கல்வி தரத்தை உறுதிப்படுத்துதல் பற்றி விவாதிக்கப்பட உள்ளன.
கல்வி அமைச்சகத்தின் ஏஐசிடிஇ தலைவா் பேராசிரியா் அனில் தத்தராயே சகஸ்ரபுதே விருந்தினராகப் பங்கேற்கிறாா். தெலங்கானா மாநில உயா்கல்வி அமைப்பின் ஆணையா் நவீன் மிட்டல் துவக்க உரையாற்றுகிறாா். மத்திய கல்வித் துறை முன்னாள் ஏஐடியூசி இயக்குநா் மன்ப்ரீத் சிங் உள்ளிட்டோா் தலைமை வகிக்கின்றனா்.
இந்த நிகழ்வில் உயா் அதிகாரிகள், வேந்தா்கள், துணைவேந்தா்கள், இயக்குநா்கள், கல்வியாளா்கள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தொழில்நுட்ப துறையைச் சாா்ந்தவா்கள் பங்கேற்று கல்வியில் தொழில்நுட்பங்களை புகுத்துவது குறித்து விவாதிக்க உள்ளனா்.