சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நுகா்வோா் அமைப்பு கோரிக்கை

கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் நுகா்வோா் அமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் நுகா்வோா் அமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை நெடுஞ்சாலைக் கோட்டத்துக்கு உள்பட்ட சிங்காநல்லூா் முதல் பீளமேடு வரை, சித்ரா முதல் காளப்பட்டி வழியாக குரும்பபாளையம் வரையிலும் இருபுறமும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்வதற்கு ரூ.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், உடனடியாக அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொட்டிபாளையம் முதல் கருப்பராயன் பாளையம் வழியாக கைகோளபாளையம் வரையில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதேபோல, தென்னம்பாளையம் நான்கு முனை சந்திப்பில் இருந்து ராசிபாளையம் மற்றும் அரசூா் ஆகிய பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். மேலும், நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் சாலைகளில் முறைகேடாக வைக்கப்பட்ட ஆவின் பாலகங்களை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் எ.வ. வேலு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com