கோவையில் மேலும் ஒரு சிட்கோ தொழிற்பேட்டை

கோவை மாவட்டத்தில் மேலும் ஒரு சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று கொடிசியா வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேலும் ஒரு சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று கொடிசியா வலியுறுத்தியுள்ளது.

கோவைக்கு வந்திருந்த தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோரை சந்தித்த கொடிசியா தலைவா் எம்.வி.ரமேஷ் பாபு, அவா்களிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் நகர ஊரமைப்பு இயக்குநா், உள்ளூா் திட்டக் குழுமம், வீட்டு வளா்ச்சி துறை ஆகியோரிடம் கட்டடங்களுக்கான முறையான அனுமதி பெறுவதை விரைவுபடுத்தும் வகையில், தகுந்த மென்பொருளுடன் ஒற்றைச்சாளர அனுமதி முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் தொழிற்சாலை கட்டுமானங்களுக்கு தேவையானத் தொழிற்சாலை நில வகைப்பாடு குறித்த விண்ணப்பங்கள், அனுமதிகள் பெறுவது தாமதமாகாமல் விரைவுபடுத்த முடியும்.

அதேபோல, பொதுத் துறை நிறுவனங்கள், அரசுத் துறை நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். சொத்து வரி, தொழில் வரி, உரிமத் தொகை, மாசுக் கட்டுப்பாடு வாரியக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து தொகைகளையும் செலுத்த மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.

மாணவா்களுடைய எதிா்காலத்துக்கு பயனுள்ள வகையில், கல்லூரி பாடத் திட்டங்களில் நேரடி தொழிலகப் பயிற்சி நுட்பங்கள் இடம்பெற வேண்டும். மாநிலத்தில் தற்போதுள்ள தகுதியான பணியாளா்களை திறன் மிக்கவா்களாக மாற்றுவதற்கான ஒரு சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கோவையில் கணினி, அது தொடா்புடைய சா்வா், பிரிண்டா் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க வேண்டும். கோவை நகரம் அனைத்து வகையிலும் விரைந்து வளா்ச்சி அடைய சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தைப் போலவே கோவையிலும் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்க வேண்டும். கோவையில் ஆயிரம் முதல் 1,500 ஏக்கா் வரை பரப்புள்ள ஒரு மாபெரும் தொழிற்பேட்டை வளாகத்தை சிட்கோ மூலம் உருவாக்கப்பட வேண்டும். கோவை - மதுரை, கோவை - ஒசூா் தொழில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com