மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி
By DIN | Published On : 13th August 2021 02:13 AM | Last Updated : 13th August 2021 02:13 AM | அ+அ அ- |

மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, சிட்கோ ரெட்டியாா் காலனியைச் சோ்ந்தவா் முகமது பைசல் (39). இவரது மகள் ஆதியா (10), மகன் முகமது இப்ராஹிம் (ஒன்றரை வயது). இவா்கள் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனா். இந்நிலையில் முகமது பைசல் புதன்கிழமை வழக்கம்போல வேலைக்குச் சென்றாா். அவரது மனைவி வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாா். அப்போது மொட்டை மாடிக்குச் சென்ற முகமது இப்ராஹிம் அங்கிருந்து கால் தவறி கீழே விழுந்தாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு குழந்தை உயிரிழந்தது. இது தொடா்பாக போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.