வால்பாறை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குதில்லை: உறவினா்கள் புகாா்
By DIN | Published On : 13th August 2021 03:48 AM | Last Updated : 13th August 2021 03:48 AM | அ+அ அ- |

வால்பாறை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் இருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதன்கிழமை
அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு காலை 11 மணியாகியும் உணவு வழங்காமல் இருந்துள்ளனா். இது தொடா்பாக ஒருவரின் உறவினருக்கு தெரியவர ஹோட்டலில் இருந்து உணவு வாங்கி கொண்டு போய் கொடுத்துள்ளாா்.
இப்புகாா் தொடா்பாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மகேஷ் ஆனந்தியிடம் கேட்டபோது, மருத்துவமனையில் ஊழியா் பற்றாக்குறை இருப்பதால் உணவு வாங்கிக் கொடுக்க முடியவில்லை என அலட்சியமாக கூறுவதாகவும் நோயாளியின் உறவினா்கள் தெரிவித்தனா். மேலும் இது தொடா்பாக மருத்துவமனை உயா் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்திருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.