ஊதியம் நிலுவை: தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதைக் கண்டித்து கோவை மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊதியம் நிலுவை: தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதைக் கண்டித்து கோவை மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதந்தோறும் 10ஆம் தேதிக்குள் மாத ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக இவா்களுக்கு ஊதியம் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தாமதமாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்ாபாக, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம் தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா். இதைத் தொடா்ந்து, கோவை தெற்கு மண்டலம், 87 ஆவது வாா்டுக்கு உள்பட்ட குனியமுத்தூா் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை காலைப் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, மண்டல சுகாதார ஆய்வாளா் ஜெகநாதன், அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அதில், வெள்ளிக்கிழமை மாலைக்குள் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் பணிக்குத் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com