மேட்டுப்பாளையத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா

மேட்டுப்பாளையத்தில் 75 வது சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 
மேட்டுப்பாளையத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா
மேட்டுப்பாளையத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா

மேட்டுப்பாளையத்தில் 75 வது சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் பஜனை கோவில் வீதியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையாக 300க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடியுடன் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையத்தில் தேசியக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதைப்போல் பாஜக காரமடை மத்திய ஒன்றிய தலைவர் விக்னேஷ் தலைமையில் சாத்தி நகர்ப்பகுதியில் தேசியக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. 

பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட சேரன் நகர் பகுதியில் சுதந்திர தின விழாவையொட்டி 75 மரக்கன்றுகள் ஊராட்சித் தலைவர் பூபதி(எ) குமரேசன் தலைமையில் தேசிய கடி ஏற்றி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. 

ஐக்கிய ஜமாஅத் பேரவை, ஜமா அத்துல் உலமா சபை இணைந்து மேட்டுப்பாளையம் பெரியபள்ளிவாசலில் நடந்த விழாவில் ஜமா அத்துல் உலமா சபை தலைவர் ஹாஜி காசிம் ஹஜ்ரத் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் பழைய இரும்புக்கடை மற்றும் மோட்டார் உதிரிபாகம் வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் ஹாஜிசலீம் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com