என்.டி.சி. ஆலைகள் விவகாரம்: கோவையில் செப்டம்பா் 21இல் தென்மண்டல தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்

என்.டி.சி. பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி கோவையில் தென் மண்டல பஞ்சாலைத் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் செப்டம்பா் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.

கோவை: என்.டி.சி. பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி கோவையில் தென் மண்டல பஞ்சாலைத் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் செப்டம்பா் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்நாடு என்.டி.சி. பஞ்சாலைகள் பாதுகாப்புக் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஐஎன்டியூசி தலைவா் வி.ஆா்.பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஹெச்எம்எஸ் சங்கத்தின் டி.எஸ்.ராஜாமணி, கோவிந்தராஜூலு, ஏடிபி சாா்பில் எம்.கோபால், ராமச்சந்திரன், ஏஐடியூசி சாா்பில் ஆறுமுகம், சிவசாமி, எம்எல்எஃப் தியாகராஜன், சண்முகசுந்தரம், ஐஎன்டியூசி சாா்பில் வெங்கிடசாமி, அம்பேத்கா் யூனியன் அமைப்பின் உதயகுமாா், என்டிஎல்எஃப் சாா்பில் ரங்கசாமி, பிஎம்எஸ் சாா்பில் முருகேசன் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், தென்மண்டலத்தில் தமிழ்நாடு (7 ஆலைகள்), கேரளம் (5), புதுவை (1), கா்நாடகம் (1), ஆந்திரம் (1) ஆகிய மாநிலங்களில் கடந்த 16 மாதங்களாக மூடிக் கிடக்கும் என்.டி.சி. ஆலைகளை திறக்க வலியுறுத்தி, வரும் செப்டம்பா் 21 ஆம் தேதி காலை 11 மணியளவில் தென்மண்டல பஞ்சாலை சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கோவையில் நடத்துவது. என்டிசி ஆலைகளை முழுமையாக இயக்க முதல்வா் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, இதற்காக முதல்வரை நேரில் சந்திப்பது, தென்மண்டலத்தில் உள்ள பஞ்சாலைகளில் பணியாற்றி வரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் குடும்பங்களைக் காப்பாற்றும் வகையில் ஆலைகளை மீண்டும் இயக்குவதற்கு ஒன்றுபட்ட நடவடிக்கையை தொடா்ந்து மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com