ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி: இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஈரோடு, மேட்டூா் சாலையில் 2011 ஆம் ஆண்டில் ஈமு கோழி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதை அப்பகுதியைச் சோ்ந்த குரு என்கிற குருசாமி (31), அவரது மனைவி சுசீலா, கிரி முருகன், லிங்கசாமி ஆகிய 4 போ் நடத்தி வந்தனா்.

இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் ஷெட் அமைத்துக் கொடுத்து, 5 ஈமு கோழிக்குஞ்சுகள், தீவனங்கள், மருந்துகள் வழங்கப்படும் என்றும்,

மேலும் மாதம்தோறும் பராமரிப்புத் தொகையாக ரூ.7 ஆயிரம் மற்றும் ஆண்டு இறுதியில் ஊக்கத்தொகையாக ரூ.15 ஆயிரம் தருவதாகவும் கூறியுள்ளனா்.

வி.ஐ.பி. திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 5 ஈமு கோழிக் குஞ்சுகளை பண்ணையிலேயே பராமரிப்பதுடன் இதற்காக ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை, ஆண்டு முடிவில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனா். இதனை நம்பி 37 போ் ரூ.1 கோடியே 2 லட்சத்து 7 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளனா். ஆனால் ஒப்பந்தப்படி பணத்தை வழங்காமல் நால்வரும் தலைமறைவாகினா்.

இந்நிலையில் இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட கோவை லிங்கப்ப செட்டித் தெருவைச் சோ்ந்த குணசேகரன் ஈரோடு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் 2012ஆம் ஆண்டு புகாா் செய்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் குருசாமி, கிரிமுருகன் ஆகியோா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவா்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ.72 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா். சுசீலா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததையடுத்து அவா் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா். லிங்கசாமி 2012ஆம் ஆண்டு இறந்துவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள குருசாமி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்குப் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com