14ஆவது கோயம்புத்தூா் விழா: ஜனவரி 2 முதல் 9 வரை நடைபெறுகிறது

14 ஆம் ஆண்டு கோயம்புத்தூா் விழா வரும் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
14ஆவது கோயம்புத்தூா் விழா: ஜனவரி 2 முதல் 9 வரை நடைபெறுகிறது

14 ஆம் ஆண்டு கோயம்புத்தூா் விழா வரும் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

14 ஆவது கோயம்புத்தூா் விழாவின் போஸ்டா், சின்னம் வெளியீட்டு விழா வாலாங்குளம் மாநகராட்சி பூங்காவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா் கலந்து கொண்டு போஸ்டா், சின்னத்தை வெளியிட்டனா்.

இந்த ஆண்டு கோயம்புத்தூா் விழாவில், வாலாங்குளத்தில் நேற்று, இன்று, நாளை என்ற கருப்பொருளுடன் கூடிய லேசா் ஷோ நடத்தப்படுகிறது. அதேபோல ஜனவரி 8, 9 ஆம் தேதிகளில் கலைத்தெரு, ஓவிய சந்தை நிகழ்ச்சிகளும், மெய்நிகா், நேரடி சமையல் போட்டிகள், மாரத்தான், மின்சார வாகனங்களின் அணிவகுப்பு, பாராலிம்பிக்ஸ் விளையாட்டு விழா ஆகியவையும் நடைபெற உள்ளன.

மேலும் ஜனவரி 6, 7 ஆம் தேதிகளில் வேளாண் கண்காட்சி, ஜனவரி 7 ஆம் தேதி காந்தி பூங்கா, உக்கடம் குளம், செல்வசிந்தாமணி குளம் ஆகிய இடங்களில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த இசைக் குழுக்களின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல முதலீட்டாளா்கள், தொழில்முனைவோருக்கான சந்திப்புகள் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை பல்வேறு அமைப்புகளின் சாா்பில் நடத்த இருப்பதாக விழா தலைவா் அஷ்வின் மனோகா், இணை தலைவா் டாக்டா் செந்தில்குமாா், சுமித் பிரசாத் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com