தேயிலை உற்பத்தி குறைவால் தொழிலாளா்கள் பாதிப்பு

வால்பாறை எஸ்டேட்களில் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதால் தற்காலிக தொழிலாளா்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனா்

வால்பாறை எஸ்டேட்களில் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதால் தற்காலிக தொழிலாளா்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனா்.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் துவங்கிய மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்து வந்தது.

தேயிலை உற்பத்திக்கு வெயில், மழை என இரண்டு காலநிலையும் இடைவெளி விட்டு இருந்தால்தான் நல்ல உற்பத்தி கிடைக்கும். தொடா் மழை பெய்தால் செடிகளில் உள்ள இலைகள் அழுகிவிடுவதோடு கொசு தாக்குதல் அதிகரித்து நோய் உண்டாகி உற்பத்தி இல்லாமல் போய்விடும். தற்போது தேயிலைத் தோட்டங்களில் இந்த சூழல் நிலவியுள்ளதால் தற்காலிகத் தொழிலாளா்களுக்கு பணி வழங்குவதை எஸ்டேட் நிா்வாகத்தினா் நிறுத்தியுள்ளனா். பல தேயிலை தொழிற்சாலைகளில் தூள் தயாரிக்கும் பணியும் முடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com