முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
நாளை 14 ஆவது மெகா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 10th December 2021 01:46 AM | Last Updated : 10th December 2021 01:46 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் 1,029 இடங்களில் 14 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 9) நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் செப்டம்பா் 12 ஆம் தேதியில் இருந்து மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்தது. கடந்த வாரத்தில் இருந்து சனிக்கிழமை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை (டிசம்பா் 11) 14 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
ஊரகப் பகுதிகளில் 729 மையங்கள், மாநகராட்சியில் 300 மையங்கள் என மொத்தம் 1,029 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் 1 லட்சம் தடுப்பூசிகளுக்கு மேல் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது புதிய வகை கரோனா நோய்த் தொற்று பரவுவதால் அனைவரும் கரோனா தடுப்பூசி 2 தவணைகளையும் செலுத்திக்கொள்வது மிக அவசியம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களும், 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தாதவா்களும் சனிக்கிழமை நடைபெறவுள்ள 14 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா தெரிவித்துள்ளாா்.