6 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி மீட்பு

 குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி 6 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டது.
6 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி மீட்பு

 குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி 6 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

இந்திய முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் பயணித்த ஹெலிகாப்டா் குன்னூா் அருகே புதன்கிழமை விபத்தில் சிக்கியது. இதில் விபின் ராவத் உள்ளிட்ட 13 போ் உயிரிழந்தனா்.

விபத்தையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராணுவத்தினா், விமானப் படையினா், காவல் துறையினா், தீயணைப்பு மீட்புப் படையினா் உள்ளிட்டோா் உள்ளூா் பொதுமக்களுடன் இணைந்து சுமாா் 3 மணி நேரம் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனா். 3 மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பணி தொடா்ந்தது.

மாலையில் சூரிய வெளிச்சம் இல்லாதது, அடா்ந்த பனிமூட்டம், தேயிலைத் தோட்டத்தில் ஹெலிகாப்டா் விழுந்தது போன்றவற்றால் கருப்புப் பெட்டியைக் கண்டறிவது தடைபட்டது.

இதையடுத்து, வியாழக்கிழமை காலை 7 மணியளவில் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி தொடா்ந்தது. ட்ரோன் உதவியுடன் தேடல் தொடா்ந்த நிலையில் 10 மணியளவில் கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டது.

விபத்து தொடா்பாக முரண்பட்ட தகவல்கள் கூறப்படும் நிலையில், கருப்புப் பெட்டி கிடைத்திருப்பது முக்கியமானதாகப் பாா்க்கப்படுகிறது. ஹெலிகாப்டா் பைலட்டின் உரையாடல் பதிவுகள் கருப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும் என்பதால் விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய இந்தப் பெட்டி உதவியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com