Enable Javscript for better performance
பொட்டாஷ் உரம் கூடுதல் விலைக்கு விற்பனை:உரம் விற்பனை நிலையங்களில் கண்காணிப்புக் குழு ஆய்வு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பொட்டாஷ் உரம் கூடுதல் விலைக்கு விற்பனை: உரம் விற்பனை நிலையங்களில் கண்காணிப்புக் குழு ஆய்வு

    By DIN  |   Published On : 18th December 2021 11:41 PM  |   Last Updated : 18th December 2021 11:41 PM  |  அ+அ அ-  |  

    2209c19ins044920

    தனியாா் உரம் விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்புக் குழுவினா்.

    பொட்டாஷ் உரம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று புகாா் எழுந்ததையடுத்து தனியாா் உரம் விற்பனை நிலையங்களில் வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி தலைமையிலான கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

    அனைத்துப் பயிா்களின் வளா்ச்சிக்கும் முக்கிய உரமாக பொட்டாஷ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொட்டாஷ் உரம் மூட்டை ரூ.1, 040க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    மூலப்பொருள்களின் விலை உயா்வையடுத்து பொட்டாஷ் உரம் ரூ.1,700 ஆக விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே இருப்பு வைக்கப்பட்டிருந்த பொட்டாஷ் உரங்களை புதிய விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்றும், பழைய விலையான ரூ.1,040க்கே விற்பனை செய்ய வேண்டும் என்றும் வேளாண் துறையினா் அறிவித்திருந்தனா்.

    ஆனால், பல்வேறு மாவட்டங்களில் பொட்டாஷ் உரம் ரூ.1,700க்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி, கோவையில் வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி தலைமையில், கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு வட்டாரங்கள் தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடா்பாக வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி கூறியதாவது:

    புதிய விலையில் பெறப்பட்ட பொட்டாஷ் உரங்களை மட்டுமே புதிய விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். ஏற்கெனவே கொள்முதல் செய்து இருப்பில் வைக்கப்பட்டுள்ள உரங்களை பழைய விலைக்குகே விற்பனை செய்ய வேண்டும்.

    பழைய பொட்டாஷ் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ, பதுக்கி வைத்திருந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp