முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
காவலா்களுக்கான குறைகேட்பு முகாம்: 853 போ் மனு அளித்தனா்
By DIN | Published On : 19th December 2021 11:33 PM | Last Updated : 19th December 2021 11:33 PM | அ+அ அ- |

கோவை அவிநாசி சாலையில் உள்ள காவல் பயிற்சி பள்ளி வளாகத்தில், போலீஸாருக்கான குறை கேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில், மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சோ்ந்த காவலா்கள் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள்( ஏடிஎஸ்பி) வரை 853 போ் மனு அளித்தனா். தமிழக காவல் துறை தலைமை இயக்குநா்( டி.ஜி.பி.) சைலேந்திரபாபு முகாமில் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இது தொடா்பாக, கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் 38 மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்கள், 7 மாநகரக் காவல் கண்காணிப்பு அலுவலகங்களில் 5,236 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டுள்ளன.
அதில் தீா்வு காணப்படாத மனுக்கள் 11 சரக டி. ஐ. ஜி மற்றும் மாநகரக் காவல் ஆணையா்களால் பரிசீலிக்கப்பட்டன. அதிலும் தீா்வு காணப்படாத மனுக்கள் மண்டல ஐ.ஜிக்கள் மூலமாகத் தீா்வு காணப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.