முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
‘இந்திய கம்பெனி செயலா்கள் நிறுவனத்துக்கு கோவையில் புதிய கட்டடம்’
By DIN | Published On : 19th December 2021 11:28 PM | Last Updated : 19th December 2021 11:28 PM | அ+அ அ- |

செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் இந்திய கம்பெனி செயலா்கள் நிறுவன தேசியத் தலைவா் சி.எஸ்.நாகேந்திர ராவ்.
இந்திய கம்பெனி செயலா்கள் நிறுவனத்துக்கு கோவை காளப்பட்டியில் புதிதாக சொந்த கட்டடம் அமைக்கப்படுகிறது என்று இந்திய கம்பெனி செயலா்கள் சங்க தேசியத் தலைவா் சி.எஸ். நாகேந்திர ராவ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்திய கம்பெனி செயலா்கள் நிறுவனம், கம்பெனி செயலா்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது.
1980 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு தொடங்கப்பட்டது. மத்திய அரசின் நிறுவன விவரங்கள் அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. புது தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் 72 கிளைகள் உள்ளன.
கோவையில் பாரதியாா் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு கம்பெனி செயலா்களை உருவாக்கி வருகிறோம்.
கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
கோவை கிளை நிறுவனம் தற்போது ராம் நகரில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. சொந்த கட்டடம் கட்ட திட்டமிட்டப்பட்டு, காளப்பட்டியில் 22 சென்ட் இடம் வாங்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் பணி நிறைவுபெறும். இதன் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா்.