முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கரடி தாக்கி சிறுவன் காயம்
By DIN | Published On : 19th December 2021 11:32 PM | Last Updated : 19th December 2021 11:32 PM | அ+அ அ- |

வால்பாறை அருகே கரடி தாக்கியதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகஅளவில் காணப்படுகின்றன.
இதனால் எஸ்டேட் தொழிலாளா்கள் அச்சத்தில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட் முதல் டிவிஷனில் வசிக்கும் ஆனந்தராஜ் என்பவரின் மகன் ராகுல் (16). இவா் கடந்த சனிக்கிழமை இரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக குடியிருப்புக்கு வெளியே சென்றுள்ளாா்.
அங்கு பதுங்கியிருந்த கரடி சிறுவனைத் தாக்கியுள்ளது. சிறுவனின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் கரடியை வனப் பகுதிக்குள் விரட்டினா். கரடி தாக்கியதில் காயமடைந்த சிறுவன் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இச்சம்பவம் குறித்து வனச் சரக அலுவலா் மணிகண்டன் விசாரணை நடத்தி வருகிறாா்.