முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
காலமானாா் வழுக்குப்பாறை பாலு
By DIN | Published On : 19th December 2021 11:32 PM | Last Updated : 19th December 2021 11:32 PM | அ+அ அ- |

வழுக்குப்பாறை பாலு
கட்சிகள் சாா்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் வழுக்குப்பாறை பாலு (74) வயது மூப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை காலமானாா்.
இவரது உடல், கோவை மதுக்கரை அருகே உள்ள வழுக்குப்பாறை மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
கோவை ஜில்லா விவசாயிகள் சங்கம், கடந்த 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாக (கட்சிகள் சாா்பற்ற) பெயா் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மாநிலத் தலைவராக இவா் இருந்து வந்தாா்.
விவசாயிகளின் பிரச்னைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.