கோவையில் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள்: ஆய்வு செய்து பட்டியல் அளிக்க ஆட்சியா்

கோவையில் பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து பட்டியல் அளிக்க ஊரக வளா்ச்சி,

கோவையில் பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து பட்டியல் அளிக்க ஊரக வளா்ச்சி, பொதுப் பணித் துறை மற்றும் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

திருநெல்வேலியில் தனியாா் பள்ளி கழிப்பறை சுவா் இடிந்து விழந்து 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட நிா்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, கோவையில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிக் கட்டடங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து பட்டியல் அளிக்க ஊரக வளா்ச்சி, பொதுப் பணித் துறை மற்றும் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழைக்கு முன்பே பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டு 16 கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

திருநெல்வேலி சம்பவத்தையடுத்து மீண்டும் ஆய்வு செய்து பழுதடைந்த கட்டடங்களின் பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவிப் பொறியாளா்களுக்கும், உயா் நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளை ஆய்வு செய்வதற்கு பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி தலைமையாசிரியா்களிடமும் பழுதடைந்த கட்டடங்கள் குறித்து பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. பெறப்படும் பட்டியல் அடிப்படையில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com