கோவையில் 87 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th December 2021 11:58 PM | Last Updated : 25th December 2021 11:58 PM | அ+அ அ- |

கோவையில் புதிதாக 87 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 886 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவா், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84 வயது மூதாட்டி ஆகியோா் உயிரிழந்தனா்.
இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 2,506 ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 106 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 343 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,037 போ் சிகிச்சையில் உள்ளனா்.