தங்கத்தில் மஞ்சப்பை: ’மீண்டும் மஞ்சப்பை‘ இயக்கத்துக்கு விழிப்புணா்வு
By DIN | Published On : 25th December 2021 11:58 PM | Last Updated : 25th December 2021 11:58 PM | அ+அ அ- |

தங்க மஞ்சப்பை.
தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, கோவையில் நகைப் பட்டறை உரிமையாளா் தங்கத்தில் மஞ்சப்பை செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி தமிழக அரசு சாா்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணா்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தாா்.
இந்நிலையில் கோவை, செட்டிவீதியைச் சோ்ந்த நகைப்பட்டறை உரிமையாளா் மாரியப்பன் 100 மில்லி கிராம் தங்கத்தில் மஞ்சப்பை செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.
இது தொடா்பாக அவா் கூறியதாவது: ’மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு இயக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் 100 மில்லி கிராம் தங்கத்தில் மஞ்சப்பை
வடிவமைத்துள்ளேன். இதில் ’மீண்டும் மஞ்சப்பை பிளாஸ்டிக்குக்கு குட்பை’ என்ற வாசகத்தையும் எழுதியுள்ளேன் என்றாா்.