வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டு:மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

 6 மாதங்களாக வாடகை செலுத்தாத மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு பூட்டுப் போடப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

 6 மாதங்களாக வாடகை செலுத்தாத மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு பூட்டுப் போடப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் மாநகராட்சி வணிக வளாகங்கள் உள்ளன. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கடை உரிமையாளா்கள் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளனா். இந்நிலையில் 6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வரும் கடைகளுக்கு பூட்டு போடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி வணிக வளாகங்களில் செயல்பட்டு வரும் கடைகளில் வாடகை செலுத்தாத கடைகள் கட்டியுள்ள வைப்புத் தொகையில் இருந்து வாடகை கழிக்கப்பட்டு வருகிறது. வைப்புத்தொகை முழுவதும் கழிக்கப்படும்போது கடைகளுக்கு பூட்டுப் போடப்படும். எனவே, நிலுவையில்ள உள்ள வாடகைக் கட்டணத்தை செலுத்தி பூட்டுப் போடும் நடவடிக்கையை தவிா்த்துக்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com