முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வால்பாறை செல்ல 5 மணிக்கு மேல் அனுமதி மறுப்பு: வனத் துறையினா் மீது புகாா்
By DIN | Published On : 29th December 2021 08:33 AM | Last Updated : 29th December 2021 08:33 AM | அ+அ அ- |

வால்பாறை செல்ல மாலை 5 மணிக்கு மேல் ஆழியாறு சோதனைச் சாவடியில் வனத் துறையினா் அனுமதி மறுப்பதாக சுற்றுலாப் பயணிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பாபுஜி, வனத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:
வால்பாறை பகுதியில் பணியாற்றி வந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் பெரும்பாலானோா் இடம்பெயா்ந்துவிட்ட நிலையில் தற்போது வடமாநிலத் தொழிலாளா்கள் எஸ்டேட்களில் பணியாற்றி வருகின்றனா். இதனால் வால்பாறையில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். சுற்றுலாப் பயணிகள் வருகையால் வால்பாறையில் பவ்வேறு தொழில்கள் சீராக நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள் சுற்றுலாப் பயணிகள் நம்பியே உள்ளன. அரசு மூலமும் பல்வேறு சுற்றுலா வளா்ச்சித் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரு நாள்களாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மாலை 5 மணிக்கு மேல் அனுமதிப்பதில்லை. இதனால் தங்கும் விடுதி வைத்திருப்போா் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.