முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
விவசாயிகள் வளா்ச்சி கருத்தரங்கம்
By DIN | Published On : 29th December 2021 08:45 AM | Last Updated : 29th December 2021 08:45 AM | அ+அ அ- |

கருத்தரங்கில் பத்மஸ்ரீ பெற்ற விவசாயி பாப்பம்மாளை கௌரவித்த எம்.பிக்கள் பி.ஆா்.நடராஜன், கே.சண்முகசுந்தரம்.
கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்புக் குழு சாா்பில் விவசாயிகள் வளா்ச்சி கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை ராம் நகரில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு, செயல் குழுவின் ஆலோசகா் செல்வராஜ் தலைமை தாங்கினாா். ஒருங்கிணைப்பாளா் சதீஷ்குமாா் வரவேற்றாா். திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளா் காா்த்திகேய சிவசேனாபதி, ருத்ர.பாலசுப்ரமணியன் ஆகியோா் கருத்துரையாற்றினா். இந்நிகழ்வில், பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி பாப்பம்மாள் மற்றும் விவசாய சங்கத் தலைவா்கள் கெளரவிக்கப்பட்டனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் சு.பழனிசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் மருத்துவா் தங்கராஜ், பொள்ளாச்சி தொழில் வா்த்தக சபை உறுப்பினா் நித்தியானந்தன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பழனிசாமி உரையாற்றினா்.
மக்களவை உறுப்பினா்கள் பி.ஆா்.நடராஜன்( கோவை) கே.சண்முகசுந்தரம்( பொள்ளாச்சி) சிறப்புரையாற்றினா்.
இந்தக் கருத்தரங்கில், விவசாயிகளை சிறு, குறு தொழில் முனைவோராக மேம்படுத்துவது, விவசாய உற்பத்தி பொருள்கள் சாா்ந்த சிறு, குறு நிறுவனங்களை உருவாக்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ரத்தினசபாபதி, வழக்குரைஞா் லோகநாதன் வாழ்த்துரை வழங்கினா். செயல் குழுவின் நிா்வாகி ஆறுச்சாமி தீா்மானம் வாசித்தாா். விவேக் தெய்வசிகாமணி நன்றி கூறினாா்.