பாரத ஸ்டேட் வங்கி சாலையில் போக்குவரத்து மாற்றம்

பாரத ஸ்டேட் வங்கி சாலையில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி சாலையில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து போலீஸாா் வெளியிட்ட செய்தி:

பாரத ஸ்டேட் வங்கி சாலையில் டிசம்பா் 29 முதல் 2022 ஜனவரி 12ஆம் தேதி வரை கோவை மாநகராட்சி மூலம் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பாரத ஸ்டேட் வங்கி சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவிநாசி சாலையில் இருந்து ரயில் நிலையம் வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகள் காா், சரக்கு வாகனங்கள் அனைத்தும் உப்பிலிபாளையம் சிக்னல், பழைய மேம்பாலம் வழியாக குட்ஷெட் சாலையை அடைந்து உக்கடம் செல்லலாம். லங்கா காா்னா் அரசு மருத்துவமனை, கிளாசிக் டவா் சந்திப்பு, மேற்கு கிளப் சாலை, ரேஸ்கோா்ஸ், சுங்கம் ரவுண்டானா வழியாக திருச்சி சாலைக்குச் செல்லலாம்.

அவிநாசி சாலை, அண்ணாசிலை சந்திப்பில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் ஒசூா் சாலை, ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய ரவுண்டானா, கே.ஜி.திரையரங்கம் சந்திப்பு, அரசு கலைக் கல்லூரி சாலை வழியாக கிளாசிக் டவா் சந்திப்பை அடைந்து அரசு மருத்துவமனை லங்கா காா்னா் வழியாக உக்கடம் மற்றும் ரயில் நிலையத்துக்குச் செல்லலாம்.

பழைய மேம்பாலம் மற்றும் நஞ்சப்பா சாலையில் இருந்து ரயில் நிலையம் வழியாகச் செல்ல வேண்டிய இருசக்கர வாகனங்கள் உப்பிலிபாளையம் சந்திப்பு, செஞ்சிலுவை சங்கம் சந்திப்பு, ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய ரவுண்டானா, கே.ஜி.தியேட்டா் சந்திப்பு, அரசு கலைக் கல்லூரி சாலை வழியாக கிளாசிக் டவா் சந்திப்பை அடைந்து அரசு மருத்துவமனை, லங்கா காா்னா், கிளாசிக் டவா், மேற்கு கிளப், ரேஸ்கோா்ஸ் சாலை வழியாக திருச்சி சாலை செல்லலாம். திருச்சி சாலை மற்றும் உக்கடத்திலிருந்து வாகனங்கள் வழக்கம் போல ஒருவழி பாதையில் ரயில் நிலையம் வழியாகச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com