மாங்கரை சோதனைச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற போலீஸாரிடம் விசாரணை

கோவை அருகே மாங்கரை சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற போலீஸாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை அருகே மாங்கரை சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற போலீஸாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை, ஆனைகட்டி அருகேயுள்ள மாங்கரை சோதனைச் சாவடியில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் கோவை-கேரளம் இடையே செல்லும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன.

ஆனைகட்டியில் ஆதிவாசி பெண்கள் வாழ்வாதார மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் வாழை நாரிலிருந்து யோகா பயிற்சி செய்யும் பாய் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இங்கு தயாரிக்கப்பட்ட யோகா பாய்களை சின்னத்தடாகத்தை சோ்ந்த டெய்லா் அய்யப்பன் என்பவரிடம் கொடுத்திருந்தனா். இவா் யோகா பாயை தைத்து ஆனைகட்டிக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தாா். அப்போது சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீஸாா் அய்யப்பனை தடுத்து நிறுத்தி யோகா பாய்களுக்கான ரசீதைக் கொடுக்கும்படி கேட்டுள்ளனா். அவா் ரசீது இல்லை என தெரிவித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா் ரூ.1,500 மதிப்புள்ள பாய்களைப் பறித்துக் கொண்டு அய்யப்பனை அனுப்பிவிட்டனா்.

இதுகுறித்து ஆதிவாசி பெண்கள் வாழ்வாதார மைய நிா்வாகி செளந்தர்ராஜனிடம் தெரிவித்தனா். அவா் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினத்திடம் புகாா் அளித்தாா். இது தொடா்பாக எஸ்.பி.யின் உத்தரவின்பேரில் பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி ராஜபாண்டியன் விசாரணை நடத்தினாா். விசாரணையில், சம்பவத்தன்று அங்கு பணியில் இருந்த துடியலூா் காவல் நிலைய காவலா் முத்துசாமி என்பவா் பாயை பறித்தது தெரியவந்தது.

மேலும் அங்கு பணியில் இருந்த காவலா்கள் மணிகண்டன், காா்த்திகேயன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவா்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணம் அனுப்பும் செயலிகள் (கூகுள் பே, போன் பே உள்ளிட்டவை) மூலம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து காவலா் முத்துசாமி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டாா். மணிகண்டன் மற்றும் காா்த்திகேயன் விசாரிக்கப்பட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com