சூலூரில் தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்

சூலூரில் தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க சார்பில் ஜனவரி 5 முதல் நடைபெற உள்ள வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சூலூரில் தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்.
சூலூரில் தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்.

சூலூரில் தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க சார்பில் ஜனவரி 5 முதல் நடைபெற உள்ள வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டம், சூலூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்க வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது. இதில்  பூறாட்டகுளு தலைவர் நாட்டுதுறை வரவேற்றார். கோவை மாவட்ட தலைவர் கே சண்முக சுந்தரம் தலைதாங்கினார். 
கோவை மாவட்ட செயலாளர் பால்ராஜ் விளக்க உரை ஆற்றினார்.

இதில் சங்கத்தின் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் வரும் 5 ஆம் தேதி முதல் கால வரையற்ற போராட்டம் துவங்கப்படும்.

அரசு அதற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என நம்புவதாக கூறினார். பணியாளர்கள் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அரசு அறிவித்துள்ள பயிர்க் கடன் நகைக் கடன் மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி குறித்த ஆய்வுகளை விரைவில் முடித்து தகுதியான நபர்களின் பட்டியலை விரைந்து மாவட்ட அளவில் வெளியிட வேண்டும்.

நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் தள்ளுபடி தொகையை அரசு ஒரே தவணையில் வழங்கி சங்கங்களை காக்க வேண்டும்.  குறியீடு அதிகமாக நிர்ணயத்தை புதிய பயிர்க்கடன் வழங்க வேண்டும் என மாவட்ட கூட்டுறவு துறை அலுவலர்கள் பணியாளர்கலுக்கு நெருக்கடி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பயிர்க்கடனுக்கு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நெறிமுறைகள் வழங்க வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்புகள் பேக்கிங் செய்து வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநில ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்லமுத்து  மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட 150க்ம் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்வது என முடிவெடுத்து ராகவன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com