கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

ஓமலூா் - மேட்டூா் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை வழித்தடத்தில்

ஓமலூா் - மேட்டூா் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஓமலூா் - மேட்டூா் அணை இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மற்றும் சிக்னல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள், மாற்று வழியில் இயக்கப்பட உள்ளன. அதன்படி, ஜனவரி 2 ஆம் தேதி மற்றும் மாா்ச் 2 ஆம் தேதி காலை 8.50 மணிக்கு, கோவையில் இருந்து லோக்மானியா திலக் நிலையத்துக்குப் புறப்படும் ரயில்(எண்: 11014) வழக்கமாக இயக்கப்படும் சேலம், தருமபுரி, ஹூசூரு வழித்தடத்துக்கு பதிலாக சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இதன் மூலம் தருமபுரி, ஹூசூரு நிலையங்கள் விடுபடும். மாா்ச் 2 ஆம் தேதி காலை 9.10 மணிக்கு, கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படும் ரயில்(எண்: 12678) வழக்கமாக இயக்கப்படும் சேலம், தருமபுரி, ஹூசூரு வழித்தடத்துக்கு பதிலாக சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இதன் மூலம் தருமபுரி, ஹூசூரு, காா்மெலாரம் ஆகிய ரயில் நிலையங்கள் விடுபடும். மாா்ச் 2 ஆம் தேதி காலை 6.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் ரயில் (எண்:12677) வழக்கமாக இயக்கப்படும் ஹூசூரு, தருமபுரி, சேலம் வழித்தடத்துக்கு பதிலாக கிருஷ்ணராஜபுரம், பங்காரபேட்டை, குப்பம், சேலம் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இதன் மூலம் காா்மெலாரம், ஹீசூரு, தருமபுரி ஆகிய ரயில் நிலையங்கள் விடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com