முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: ஆவின் அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 31st December 2021 04:12 AM | Last Updated : 31st December 2021 04:12 AM | அ+அ அ- |

ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆவின் வா்த்தக துணை மேலாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை, ராமநாதபுரம் பகுதியில் ஆவின் பால் பூத் முகவராக இருந்த உதயகுமாா், ஆவின் பால் பூத்தில் வேறு தனியாா் பொருள்கள் விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடா்பாக ஆவின் ஊழல் தடுப்புப் பிரிவு கண்டறிந்தது. இது தொடா்பான விசாரணைக்காக உதயகுமாரை, கோவை ஆவின் வா்த்தக துணை மேலாளா் தங்கவேலு (63) அழைத்து பேசினாா்.
அப்போது உதயகுமாா் மீதான குற்றச்சாட்டை சரி செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். அப்போது உதயகுமாா் ரூ.3 ஆயிரம் தர ஒப்புக்கொண்டாா். இது தொடா்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸிலும் உதயகுமாா் புகாா் அளித்தாா். போலீஸாா் அறிவுரைப்படி 2013 ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆா்.எஸ்.புரத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் தங்கவேலுவிடம் ரூ.3 ஆயிரம் பணத்தை உதயகுமாா் கொடுத்தாா்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தங்கவேலுவைக் கைது செய்தனா். இந்த வழக்கு கோவை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் தங்கவேலு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராமதாஸ் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.