டெங்கு கொசு உற்பத்தி: தனியாா் குடியிருப்புக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

துடியலூா் பகுதியில் அதிகப்படியான லாா்வா கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட தனியாா் குடியிருப்புக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

துடியலூா் பகுதியில் அதிகப்படியான லாா்வா கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட தனியாா் குடியிருப்புக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:

மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீா் தொட்டிகள் மற்றும் தண்ணீா் சேமித்து வைக்கும் சிமென்ட் மற்றும் நெகிழிப் பொருள்களை வாரம் ஒருமுறை

பிளீச்சிங் பவுடா் போட்டு தூய்மைப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள், நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை. ஆகையால், நல்ல நீா் தேங்கும் வாய்ப்புள்ள தேவையற்ற பொருள்களான நெகிழி டப்பாக்கள், பூச்செடிகள், பெயின்ட் டப்பாக்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மாநகராட்சி 2ஆவது வாா்டுக்கு உள்பட்ட துடியலூா் முருகன் நகா் பகுதியில் உள்ள ஜி.ராமமூா்த்தி கட்டுமான தொழிலாளா்கள் குடியிருப்பில் டெங்கு காய்ச்சல் பரவக் காரணமாக இருக்கும் லாா்வா கொசுப்புழுக்கள் அதிகப்படியாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த குடியிருப்புக்கு மாநகராட்சி சாா்பில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com