தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னா

கோவையில் தூய்மைப் பணியாளரின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா் ரங்கசாமியின் குடும்பத்தினா்.

கோவை, குனியமுத்தூா் அருகே உள்ள பி.கே.புதூா்,மதுரை வீரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி. இவா் கோவையில் உள்ள ஒரு மாநகராட்சி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா். இவருடைய மனைவி தேவி. இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். இந்நிலையில், ரங்கசாமி கடந்த 3 நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, ‘தன் மீது வீண் பழி சுமத்தி, பணியை விட்டு நீக்க வேண்டும்’ என மருத்துவமனையில் பணிபுரியும் 3 போ் நிா்பந்தம் செய்ததால், தான் தற்கொலை செய்து கொள்வதாக செல்லிடப்பேசியில் பதிவு செய்து, அதை சகப் பணியாளா்கள், நண்பா்களுக்கு ரங்கசாமி அனுப்பியிருந்தாா்.

இந்த விடியோ சமூக வலைதலங்களில் பரவி வருகிறது. இதற்கிடையே ரங்கசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலத்தை வாங்க மறுத்த அவரது மனைவி தேவி, மகள்கள் சங்கீதா, கோகிலா மற்றும் உறவினா்கள் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் அமா்ந்து வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

ரங்கசாமியின் மரணத்துக்கு காரணமான 3 போ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Image Caption

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா் ரங்கசாமியின் குடும்பத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com