கோவை - லோகமான்ய திலக் சிறப்பு ரயில் மாற்று வழியில் இயக்கம்

கோவை - லோகமான்ய திலக் (மும்பை) சிறப்பு ரயில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மற்றும் 17, 18, 23, 24 ஆகிய 8 நாள்களுக்கு

கோவை - லோகமான்ய திலக் (மும்பை) சிறப்பு ரயில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மற்றும் 17, 18, 23, 24 ஆகிய 8 நாள்களுக்கு மாற்று வழியில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக மாநிலம், ஏலஹங்கா - தா்மாபுரம் இடையே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோவை - லோகமான்ய திலக் இடையே இயக்கப்படும் தினசரி சிறப்பு ரயில் (எண்: 01014) வரும் 12ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மற்றும் 17, 18, 23, 24 ஆகிய 8 தினங்களில் சேலம், ஜோலாா்பேட்டை, ரேணிகுண்டா, குண்டக்கல் வழியாக மாற்று வழியில் இயக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறிப்பிட்ட 8 நாள்களில் தருமபுரி, ஒசூா், பெங்களூரு, ஹிந்துபூா், ஸ்ரீ சத்யசாய் பிரசாந்தி நிலையம், தா்மாபுரம், அனந்தபூா் ஆகிய நிலையங்களுக்கு இந்த ரயிலில் செல்வதைப் பயணிகள் தவிா்க்கவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com