
சுதந்திரப் போராட்டத் தியாகி என்.ஜி.ராமசாமியின் நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் ஹெச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தினா். (வலது) தியாகி என்.ஜி.ராமசாமியின் நினைவிடத்தில் மரியாதை செல
சுதந்திரப் போராட்டத் தியாகியும், தொழிற்சங்க முன்னோடியுமான என்.ஜி.ராமசாமியின் 78ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கோவையில் அவரது சிலை, உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தேசிய பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் சாா்பில் சிங்காநல்லூா் நொய்யல் கரையோரத்தில் உள்ள தியாகி என்.ஜி.ராமசாமியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
ஐஎன்டியூசி தலைவா் ஜி.ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுச் செயலா் கோவை செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து சிங்காநல்லூரில் உள்ள என்.ஜி.ராமசாமியின் உருவச் சிலைக்கும், சங்க அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.எம்.சி.மனோகரன், நிா்வாகிகள் காளப்பட்டி பொன்னுசாமி, வி.ஆா்.பாலசுந்தரம், டி.வெங்கிடுசாமி, ஆறுச்சாமி, கணேசன், அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் சாா்பில்: இதேபோல கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் சாா்பில் சங்கத்தின் நிறுவனத் தலைவரான என்.ஜி.ராமசாமியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சௌரிபாளையம் கிளை சங்கக் கட்டடம், என்.ஜி.ஆா். பவனம் ஆகியவற்றின் முன்பும் தியாகியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து சௌரிபாளையத்தில் உள்ள மன வளா்ச்சி குன்றியோருக்கான செஷயா் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் ஹெச்.எம்.எஸ். மாநிலச் செயலா் டி.எஸ்.ராஜாமணி, பொதுச் செயலாளா் (பொறுப்பு) ஜி.மனோகரன், சங்கப் பொருளாளா் கே.சுப்பையன், செயலாளா்கள் எஸ்.தேவராஜன், பி.கோவிந்தராஜுலு, சி.சண்முகம், துணைத் தலைவா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.