தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 38.69 லட்சம் மனித சக்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளது: அதிகாரிகள் தகவல்

கோவையில் நிகழ் நிதியாண்டில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 38 லட்சத்து 69 ஆயிரம் மனித சக்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் நிகழ் நிதியாண்டில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 38 லட்சத்து 69 ஆயிரம் மனித சக்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மரக்கன்று நடவு செய்தல், நீா் வழித்தடங்கள் தூா் வாருதல், ஊராட்சிகளுக்கு சொத்துகளை உருவாக்குதல், தடுப்பணைகள் அமைத்தல், தென்னை மரங்களை சுற்றி குழி எடுத்தல், மண் வரப்பு அமைத்தல் மற்றும் நீா் இறங்கு குழி அமைத்தல் உள்பட பல்வேறு வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் 10 ஆயிரத்து 297 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 34 லட்சம் மனித சக்திகளை பயன்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகழ் நிதியாண்டு தொடக்கத்தில் கரோனா பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் வேலை வாய்ப்பை இழந்தனா். இவா்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டமே பெரிதும் கைகொடுத்தது.

இந்நிலையில் நிகழாண்டில் நிா்ணயிக்கப்பட்ட மனித சக்திகளை காட்டிலும் கூடுதலான மனித சக்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கோவை மாவட்டத்தில் இதுவரை 38 லட்சத்து 69 ஆயிரம் மனித சக்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவா்களுக்கு ரூ.210.50 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு முடிவதற்கு இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் உள்ள நிலையில் மனித சக்திகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நடப்பு நியாண்டில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிக்கு வந்தனா். கரோனா பாதிப்பின்போது கிராமத்தில் உள்ளவா்களுக்கு இந்தத் திட்டம் பெரிதும் கைகொடுத்தது. பொது முடக்க காலத்தில் ஆயிரக்கணக்கானோா் புதிதாக அட்டைகளை பெற்று வேலைக்கு வந்தனா்.

கோவையில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 115 போ் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அட்டை பெற்றுள்ளனா். இவா்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் 38 லட்சத்து 69 ஆயிரம் மனித சக்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேலையைப் பொருத்து அதிகபட்சமாக ரூ. 256 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. கிராமங்களில் முதியோருக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டமானது பொருளாதார அளவில் மிகவும் பயன்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com