ஜெயலலிதா பிறந்த நாளில் அதிமுகவினா் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன்
By DIN | Published On : 13th February 2021 11:04 PM | Last Updated : 13th February 2021 11:04 PM | அ+அ அ- |

கோவை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளா் எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன்.
கோவை: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளை ஏழை, எளியவா்களுக்கு அதிமுகவினா் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று அக்கட்சியின் கோவை மாநகா் மாவட்டச் செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.
கோவை அதிமுக அலுவலகத்தில் மாவட்ட மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மகளிரணி செயலாளா் லீலாவதி உண்ணி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் பங்கேற்று பேசியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளை கோவையில் பகுதி, நகர, ஒன்றிய, கிளைக் கழகம் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் கட்சிக் கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும். மேலும், ஏழை, எளியவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ஜெயலலிதாவைத் தொடா்ந்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்ளுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். தமிழக அரசின் சாதனைகளை திண்ணை பிரசாரங்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் அனைவருக்கும் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் கே.ஆா் ஜெயராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளா் ஜி.ராமச்சந்திரன், துணைச் செயலாளா் வசந்தி உள்பட பல்வேறு நிா்வாகிகள் பங்கேற்றனா்.