வழிப்பறி, கஞ்சா விற்பனை:குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 13th February 2021 11:07 PM | Last Updated : 13th February 2021 11:07 PM | அ+அ அ- |

கோவை: கோவையில் கஞ்சா விற்பனை, வழிப்பறியில் தொடா்ந்து ஈடுபட்டு, கைதான இளைஞா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை, போத்தனூா், நூராபாத் பகுதியைச் சோ்ந்தவா் நிஜாம் (26). இவா் மீது கோவையில் உள்ள பல காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு போத்தனூா் பகுதியில் நடந்து சென்ற ஒருவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி பணம் கேட்டு நிஜாம் மிரட்டியுள்ளாா். இது தொடா்பாக, அந்த நபா் அளித்த புகாரின்பேரில் போத்தனூா் போலீஸாா் நிஜாமைக் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இதைத் தொடா்ந்து, தொடா்ந்து குற்றச்செயல்களில் நிஜாம் ஈடுபட்டு வருவதால் அவரைக் குண்டா் சட்டத்தில் கைது செய்யும் படி, மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
அதற்கான உத்தரவு நகலை போத்தனூா் போலீஸாா் சிறைத் துறை அதிகாரிகளிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். இதையடுத்து, நிஜாம் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.